Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” அரசு விதித்துள்ள தடை…. கவலையில் வடமாநில தொழிலாளர்கள்….!!

விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு தடை விதித்ததால் வடமாநில தொழிலாளர்கள் சிலையை விற்பனை முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்தல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் மற்றும் நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, அருகில் உள்ள நீரில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலத்தில் வடமாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கடந்த ஒரு மாதமாக விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விநாயகரை ஊர்வலமாக கொண்டு செல்லுதல் மற்றும் சிலை வைப்பதற்கு அரசு அனுமதி கொடுக்காததால் வடமாநில தொழிலாளர்கள் கவலையில் இருக்கின்றனர். இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறியபோது, கொரோனா ஊரடங்கினால் தாங்கள் தயாரித்து வைத்திருக்கும் சிலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து தொழில்களும் இயல்பு நிலை திரும்பியதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் வந்ததாக வடமாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக எளிதில் கரையக் கூடிய வகையில் கிழங்கு மாவு மூலம் சிலைகள் தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் விநாயகர் சிலை வைத்தல் மற்றும் ஊர்வலம் எடுத்துச் செல்லுதல் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்ததால் தாங்கள் கவலையில் இருப்பதாக வட மாநிலத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அரசு விதித்துள்ள தடையால் தாங்கள் தயாரித்த சிலைகளை விற்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |