Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா” பூக்களின் விற்பனை மும்முரம்…. கவலை தெரிவித்த வியாபாரிகள்….!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி மார்க்கெட்டில் பூ விற்பனை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வீட்டில் சிலை வைத்து வழிபட்டனர். இதனையடுத்து விநாயகர் சிலையை அலங்கரிப்பதற்கான பூக்களை தர்மபுரி மார்க்கெட்டில் பெரும்பாலான பொதுமக்கள் வாங்கி சென்றனர். அங்கு சாமந்தி, கனகாம்பரம், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில வருடங்களை ஒப்பிடும்போது பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்கள் குறைவாகத்தான் விற்பனை செய்யப்பட்டது என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |