Categories
அரசியல்

விநாயகரை வழிபாடு செய்யும் சிறந்த வழிமுறைகள்…. மிஸ் பண்ணீடாதிங்க….!!

உலகம் முழுவதும் கொண்டாடப்படகூடிய பூஜைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். இந்த பூஜையை நாம் செய்யகூடிய நேரம் பற்றி பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி கொண்டாடக்கூடிய நாளான 31/08/2022 அன்று காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால் காலை 4:00 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்யலாம் அல்லது 6 மணி முதல் 7:15 மணி வரை வழிபாடு செய்யலாம் அல்லது 9 மணி முதல் 12 மணி வரை வழிபாடு செய்யலாம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்யலாம்

மேலும் 31ம் தேதி மதியம் 2.45 மணி வரை தான் சதுர்த்தி திதி உள்ளது. ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி தான் மிகவும் முக்கியமானது. ஆனால் விநாயக பெருமானை மாலையில் வழிபடலாமா என்றால் காலையில் நமக்கு துவங்கும் போது சதுர்தியிலேயே துவங்குகின்ற காரணத்தால் அன்று மாலை நாம் விநாயகரின் வழிபாடு செய்து கொள்ளலாம்.

குறிப்பாக வாங்கும் விநாயகரை வணங்கி விட்டு எங்கோ கொண்டு வைத்து விட்டு வரகூடாது. யாராவது எடுத்துச் சென்று கரைத்து விடுவார்கள் எனும் அலட்சியத்துடன் விநாயகரை வைப்பதாக இருந்தால் அதனை வாங்க வேண்டாம். வீட்டில் இருக்கும் விநாயகரை வைத்து நாம் வழிபாடு செய்து கொள்வது நல்லது.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பித்தமான பால் , அப்பம் , பழங்கள் , கடலை, தேங்காய் , மோதகம் , கொழுக்கட்டை ,  வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு, சர்க்கரை பொங்கல் , அவள் , பொறி , கம்பு சோளம் , கரும்புத் துண்டு என கிடைப்பதை வாங்கி வைக்கலாம். எளிமையாக 2 வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு , அவல் பொரிகடலை வைத்து கூட வழிபாடு செய்யலாம். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி என்றால் விநாயகருக்கு பிடித்தமான மோதகம் இல்லாமல் இருக்குமா. அதனையும் சேர்த்து படைத்தல் நமக்கு நன்மை கிட்டும்.

இதனையடுத்து 3 நாள் விநாயகரை வீட்டில் வைத்து பின்பு அவரை கரைக்க வேண்டும். 3ம் நாள் வெள்ளிக்கிழமை கரைப்பதற்கு சங்கடமாக இருந்தால் 5 நாள் நாம் வைக்கலாம். அதன்பின் ஞாயிற்றுக்கிழமை கரைத்து விடலாம். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகரை கரைக்கும் வரை 1 வேலையாவது வாழை பழம் , ஏதாவது வைத்து வழிபாடு செய்யவும். இதுவே அவரை பூஜிப்பதார்கான சிறந்த மற்றும் எளிய வழிமுறைகள் ஆகும்.

Categories

Tech |