விநாயகர் சிலையை பீச்சில் கரைக்க விடாமல் பொதுமக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சில் பொதுமக்கள் சிலர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொதுமக்களை பீச்சில் சிலையை கரைப்பதற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பிச்சுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இருப்பினும் சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து விநாயகர் சிலையை பீச்சில் கரைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து இம்மாவட்ட துணை காவல்துறை சூப்பிரண்டு கரிகால்பாரி சங்கரிடம் கேட்ட போது வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சில்வர் பீச்சில் கரைக்க தடை இல்லை, இருப்பினும் அதிக மக்கள் கூடும் காரணத்தினால் காவல்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். அதனால் தனி நபர்களாக சென்று பீச்சில் விநாயகர் சிலைகளை கரைக்க எந்த தடையுமில்லை என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சில்வர் பீச்சில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பீச்சுக்கு வரும் நபர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து சிலையைக் அழைத்துச் செல்ல வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் தெரிவித்துள்ளனர்.