தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். சிம்பு ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர்.
சிம்பு இயக்கத்தில் மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் சிம்பு பாடிய புல்லட் சாங் பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆன நிலையிலும், ரசிகர்களால் கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை மறக்கவே முடியாது. இந்த படத்தின் 2-ம் பாகம் ரிலீஸ் ஆகும் என்று பலமுறை தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.