இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டன் என்பதால் இவர் இப்படி காங்கிரஸ் என பெயர் வைத்தாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக வினோத் ஜெயின் பேசுகையில், எங்களது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை உடையது. எனது குழந்தைக்கு சரியாக 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் கண்டிப்பாக இணைத்து விடுவேன். முதலில் காங்கிரஸ் என இந்த குழந்தைக்கு பெயரிட என் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். முடிவில் பின் வாங்காமல் விடாப்பிடியாக இருந்து அவர்களை சம்மதிக்க வைத்து விட்டேன் என மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வினோத் ஜெயினுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 ஆண்டுக்கு பின் வினோத் ஜெயினுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.