Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வினோதமான சாணியடி திருவிழா” இதை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்…. பார்த்து ரசித்த பெண்கள்….!!

பீரேஸ்வரர் கோவிலில் வினோதமாக நடைபெற்ற திருவிழாவில் ஆண்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசி கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையில் இருந்து 3-வது நாள் வினோதமாக சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதாவது திருவிழாவின் முதல்நாளே மாடு வளர்ப்பவர்கள் அவரவர் வீடுகளிலிருந்து பசு சாணத்தை கொண்டு வந்து கோவில் அருகில் உள்ள ஒரு இடத்தில் குவித்து வைப்பார்கள். இதனையடுத்து பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஆண்கள் ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசி கொண்டாடுவது வழக்கமாக இருக்கின்றது.

அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் உற்சவர் சாமி சிலையை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின் கோவிலுக்கு சிலை வந்ததும் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மேலாடை இன்றி சாணம் கொட்டப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பின் ஒருவர் மீது ஒருவர் அதை உருட்டி வீசி கொண்டாடினர்.

இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவர்கள் தூரத்தில் நின்று இதை பார்த்து ரசித்தனர். இத்திருவிழா சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. அதன்பின் விழாவில் கலந்துகொண்ட அனைவரும் ஊர் குளத்திற்கு சென்று நீராடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். மேலும் உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் கோவிலுக்கு வந்த அவர்கள் திருவிழா நடந்த இடத்தில் கிடந்த சாணியை எடுத்துக்கொண்டு தங்களுடைய விளைநிலங்களில் வீசினார்கள். இவ்வாறு செய்தால் அந்த வருட பயிர்கள் நோய் தாக்காமல் செழிப்பாக வளரும் என்பது அங்கு இருப்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |