Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு ஆராய்ச்சியில்…. மனிதனுக்கு பதில் ரோபோ…. தீவிர பணியில் பிரபல நாடு….!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரோபோக்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது.

ரஷிய நாட்டின் விண்வெளி பயிற்சி மையம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோதனை ரீதியாக ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்விற்கு புதிய தலைமுறையின் ‘டெலிடிராய்டு’ என்னும் மானுடவியல் ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. மேலும், இதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. தற்போது துபாயில் சர்வதேச விண்வெளி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் ரஷியா விண்வெளி பயிற்சி மையத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “விண்வெளி ஆய்வில் மனிதர்களின் பங்களிப்பை முழுமையாக ரோபோக்கள் நிறைவேற்றாது. ஆனாலும் ரோபோக்கள் மண்ணை சேகரிப்பது, துளையிடுவது போன்ற சில செயல்களை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவை. மனிதர்களால் நீண்ட காலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள முடியாது.

ஆனால் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி அவற்றை பூமியில் இருந்தே மனிதர்களால் கட்டுப்படுத்த முடியும். எனவே, ‘டெலிட்ராய்டு ரோபோவை’ முழுமையாக மேம்படுத்துவதற்கு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டுக்குள், புதிய ரோபோக்கள் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளுடன் சுற்றுப்பாதையில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.

இந்த மாநாட்டில், ரஷிய விண்வெளி பயிற்சி மையம் மானுடவியல் ரோபோக்களை கட்டுப்படுத்துகிற மனிதர்களை தயார்படுத்தும் உபகரணத்தை காட்சிப்படுத்தியது. இந்த ‘டெலிடிராய்டு ரோபோவை’ மானுடவியல் ரோபோவாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |