விண்வெளி குறித்து முதல் முறை வணிக ரீதியிலான அறிவியல் ஆராய்ச்சியை தனியார் குழு மேற்கொள்ள உள்ளது.
விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாசா, அகசியம், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைந்து முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியிலான 4 வீரர்களை கொண்ட குழுவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 21 மணி நேர பயணத்திற்கு பிறகு விண்வெளியை சென்று அடைந்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்த மற்ற வீரர்கள் புதிதாக வந்த வீரர்களை உற்சாகத்தோடு வரவேற்றனர். இந்த நால்வர் குழு 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளது.