Categories
உலக செய்திகள்

ஏலம் விடப்பட்ட இருக்கை…. விண்வெளிக்கு செல்லும் முதல் வாலிபர்…. தகவல் வெளியிட்ட புளூ ஆரிஜின் நிறுவனம்…!!

அமேசான் நிறுவனர் அவரின் சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து  வயதான பெண் விமான பயிற்சியாளர் மற்றும் வாலிபர் செல்ல இருக்கிறார்கள்.

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் தனது புளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தை 2000 ல் தொடங்கினார். இந்த புளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலமானது வருகிற ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது. இந்த பயணத்தில் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பெசோஸ் உடன் இணைந்து 82 வயதான வாலி பங்க் என்ற பெண் விமான பயிற்சியாளரும் பயணிக்க உள்ளார். இதனால் விண்வெளிக்கு செல்லும் முதியவர் என்கிற பெருமையை தட்டிச் செல்கிறார்.

மேலும் இவர்களுடன் இருவர் பயணிக்கலாம் என்ற நிலையில் 2 இருக்கைகளில் ஒன்றை ஜோஸ் டேமன் என்ற அமெரிக்க தொழிலதிபர் பதிவு செய்துள்ளார். இந்த இருக்கையின் விலையானது 28 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் ஜோஸ் டேமனுக்கு பதில் அவரின் மகன் ஆலிவ் டையமென் செல்லவிருக்கிறார் என்பதை புளூ ஆரிஜின் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ஆலிவ் டையமென் இளம் வயதிலேயே விண்வெளிக்கு செல்லும் முதல் நபர் என்ற பெருமைக்குரியவர் ஆவார் என்பது குறிப்படத்தக்கதாகும்.

Categories

Tech |