Categories
தேசிய செய்திகள்

விதிமுறைகளை மீறி… கொரோனா பாதித்தவருக்கு நடந்த இறுதி சடங்கு… 21 பேர் பரிதாப பலி..!!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தொட்டு பார்த்த உறவினர்கள் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டு கொரோனா பாதித்த நபர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை தகனம் செய்யும். ஆனால் தற்போது உறவினர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்கும் காரணத்தினால் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தும் நெறிமுறைகளை கடைப்பிடித்து தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் இங்கு ஒரு கிராமத்தில் அதுபோன்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தினால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இறுதி சடங்கின் போது அவரது உடலில் போர்த்தி இருந்த பிளாஸ்டிக் கவரை பிரித்து அவரது உடலைத் தொட்டுப் பார்த்து உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் அந்த இறுதிச் சடங்கில் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் 21 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது 21 பேரில் 5 முதல் 6 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மீதி இருப்பவர்கள் உயிரிழந்த தன் காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |