Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய…. 3 டீ கடைகளுக்கு… சீல் வைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 டீ கடைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் அனைத்தும் பொதுமக்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காரணமின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுடைய 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலப்பட்டியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி டீ விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வருவாய் துறையினர் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி  கடைகளை திறந்து டீ விற்பனை செய்த 3 கடைகளுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் உணவுகளை விற்பனை செய்த ஹோட்டலுக்கும் சீல் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடை உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை மீறியும் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |