மத்திய அரசு தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவானது தனிநபர் விவரங்களை பணமாக்கும் நிறுவனங்களை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனிநபரின் விவரங்களை சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினால் ரூபாய் 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதனையடுத்து தரவுகளில் விதிமீறல் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் வரி விலக்குகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் தரவுகளை கையாளும் நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட அதிபர்களின் ஒப்புதல் உடன் அதை கையாள்வதற்கும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதற்காகவும் மசோதா இயற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.