ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பேரூராட்சியில் திருவாடனை தாசில்தார் செந்தில்குமார் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக பேருந்து நிலையம் மார்க்கெட் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த 2 உணவகங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி டீ விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டீ விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கேன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் விற்பனை செய்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.