பிரான்சில் விதிமுறைகளை மீறியதாக 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரிஸில் உள்ள ஒரு ஓட்டலில் 10 பேர் வரை அமர்ந்திருந்ததால் விதிமுறைகளை மீறியதாக சொல்லி அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் அந்த உணவகம் 15 நாட்களுக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டது. இதேபோல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் விதிமுறைகளை மீறியதாக சொல்லி 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.