பிரிட்டனில் அரசு விதித்துள்ள விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவப்பு நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு நியமித்துள்ள ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பத்து நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு இருவிதமான வைரஸ் பரிசோதனை செய்யப்படும். இதில் முதல் கட்ட கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாதவர்களுக்கு 1000 பவுண்ட் அபதாரமும், இரண்டாவது சோதனை செய்து கொள்ளாதவர்களுக்கு 2000 பவுண்ட் அபதாரமும் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறும் மக்கள் அனைவரும் ஆபத்தில் இருப்பார்கள். தனிமை படுதலுக்கு ஒத்துழைக்காமல் இருப்பவர்களுக்கும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்துகொள்ள தவறுபவர்களுக்கும் கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.