Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ மீது தேச துரோக வழக்கு” ஜூலை 5_ஆம் தேதி தீர்ப்பு …!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதி பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5_ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2009_ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்க்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுவாகவும் ,  மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரசியல் கட்சி MLA போன்றோரை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு நடந்து வந்தது.

வைகோ நீதிமன்றம் க்கான பட முடிவு

இந்த வழக்கு விவாதங்களில் வைகோ பேசியதற்காக ஆதாரமாக செய்திதாளைகளில் வெளியான செய்திகள் உட்பட அனைத்தையும் ஆராயப்பட்டது.இதில் வைகோ நான் பேசியது தவறு இல்லை . உண்மைதான் என்று தெரிவித்தார். எந்தவித தண்டனையையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்குக்கான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்  வழக்கின் தீர்ப்பை  ஜூலை 5_ஆம் தேதிக்கு தொத்திவைத்துள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

Categories

Tech |