Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைகள்… போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்…!!

கொரோனா காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டிக்க துருக்கி நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

துருக்கியில் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் புதிய சட்டங்களை கடந்த 2011ம் ஆண்டு துருக்கி அரசு கொண்டு வந்தது. இத்தகைய புதிய சட்டங்களுக்கு பழமைவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அச்சட்டங்களை ரத்து செய்வது குறித்து அதிபர் எர்டோகன் ஆலோசித்தார். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்ட சட்டங்களை வலியுறுத்தி நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அந்நாட்டில் பைனர் குல்டெகின் என்ற கல்லூரி மாணவி அவருடைய காதலனால் எரித்து கொலை செய்யப்பட்டார். மேலும் கடந்த ஆண்டு மட்டும் துருக்கியில் 474 பெண்கள் வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டு இருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் பெரும்பாலும் கணவன், குடும்ப உறுப்பினர்கள், ஒருதலைக் காதல் போன்றவற்றால் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து பெண்கள் உரிமைக்களுக்கான ஆர்வலர் அன்னா பிளஸ் கூறுகையில், “துருக்கி அரசு அதிகாரிகள் பெண்களுக்கான பாதுகாப்பபு சட்டங்களை திரும்பப் பெறுவது மிகவும் தவறான விஷயம். கொரோனா ஊரடங்கின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |