Categories
உலக செய்திகள்

காங்கோ நாட்டில் வன்முறை…. இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழப்பு…!!!

கங்கோ நாட்டில் ஐ.நா அமைதிப்படையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் உட்பட மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அரசு படையினரை குறி வைத்து அவர்கள் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

நாட்டில், ஐ,நா அமைதிப்படைகள் மற்றும் உள்நாட்டு படைகள் இருக்கும் போது, தீவிரவாத தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கொந்தளித்த மக்கள் புடிம்போ என்ற பகுதியில் அமைந்துள்ள அமைதிப்படை அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

அங்கு பொருட்களை அடித்து நொறுக்கி, அமைதிப்படை வீரர்களை தாக்கினர். மேலும், அவர்கடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி தாக்குதல் மேற்கொண்டார்கள். இந்த பயங்கர கலவரத்தில் அமைதிப்படையை சேர்ந்த மூன்று வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அதில் இருவர் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

Categories

Tech |