ஈகுவேடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் கலவரம் வெடித்து 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது.
அந்த வகையில் கோஷ்டி தலைவர்களாக கருதப்படும் மூன்று பேரை வேறொரு சிறைக்கு மாற்றுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் கைதிகளிடையே சண்டை ஏற்பட்டு கலவரம் உண்டானதில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், ராணுவத்தினரை வரவழைத்து வன்முறையை கட்டுப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.