விழுப்புரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இளைஞர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை சம்மந்த பட்ட மாவட்ட சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது.
டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் காணாமல் போயுள்ளார். இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவரை போலீசார் தேடி வருகின்றனர்.