வயலின் கலை மூலம் உலகம் முழுவதும் நிதி திரட்டி கணவர் தனது மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஸ்வப்பன் செட். இவர் வயலின் கலைஞர் ஆவார். இவருடைய மனைவிக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது மனைவியை அவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று அறியாமல் தனக்கு தெரிந்த வயலின் கலையை வைத்து உலகம் முழுவதும் சென்று நிதி திரட்ட முயன்றுள்ளார். அதன்படி அவர் 17 வருடமாக வயலின் கலை மூலம் திரட்டிய நிதியில் கடந்த 2019ஆம் ஆண்டு தனது மனைவிக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
blob:https://www.facebook.com/e56be856-3ff1-4e94-b8b3-451a74c48174
இதனையடுத்து சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். உலகம் முழுவதும் 17 ஆண்டுகள் சுற்றித்திரிந்து வயலின் கலை மூலம் நிதி திரட்டி அதன் மூலம் தன் மனைவியின் உயிரை காப்பாற்றிய ல்வப்பன் செட் பற்றி அறிந்ததும் ட்ருஷா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.