Categories
உலக செய்திகள்

உலகம் முழுக்க 50,000 பேரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட நிறுவனம்.. அதிர வைக்கும் தகவல்..!!

இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் ராஜ குடும்ப உறுப்பினர்கள் செய்தியாளர்கள் போன்ற முக்கிய நபர்களை ரகசியமாக உளவு பார்த்ததாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் NSO என்ற தனியார் நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரித்தது. இது உளவு மென்பொருளாகும். மேலும் இந்நிறுவனம் அரசுடன் மட்டுமே இணைந்து செயலாற்றுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 2016 ஆம் வருடத்திலிருந்து தற்போது வரை உலகம் முழுக்க சுமார் 50,000 முக்கிய நபர்களுடைய தொலைபேசி தகவல்களை உளவு பார்த்திருக்கிறது.

அந்த வகையில், ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளரின் மனைவி Hanan Elatr என்பவரின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் சவுதி சிறப்பு படையினர், கஷோகியை துருக்கியில் வைத்து கொடூரமாக கொன்றனர். தற்போது வரை அவரின் சடலம் கூட கிடைக்கவில்லை.

மேலும் பிரபலமான பல்வேறு செய்தி நிறுவனங்களின் முக்கிய செய்தியாளர்களின் போன்களையும் உளவு பார்த்துள்ளனர். இது மட்டுமல்லால், பல்வேறு நாட்டு பிரதமர்கள், சவுதி அரேபியாவின் ராஜ குடும்ப நபர்கள், ஜனாதிபதிகள், தூதரக அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரின் தொலைபேசி தகவல்களும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தியா உட்பட சுமார் 10 நாடுகள் NSO நிறுவனத்தின் மென்பொருள் தான் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்த முக்கிய நபர்களின் தொலைபேசி தகவல்களை, இந்த NSO நிறுவனம் நரேந்திர மோடி அரசின் கோரிக்கைக்காக உளவு பார்த்துள்ளது.

Categories

Tech |