இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெள்ளைக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கரவாகனமானது அருகில் நின்ற வேன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைக்கண்ணு மற்றும் செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வெள்ளைக்கண்ணு உயிரிழந்துவிட்டார். மேலும் பலத்த காயம் அடைந்த செல்வி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இறந்த வெள்ளைக்கண்ணுவின் இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.