Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போகக் கூடாதா….? மாற்றுத்திறனாளிக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் நடந்த கோரவிபத்து….!!

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண் பார்வையற்றவர். இந்நிலையில் கந்தசாமி, திருநெல்வேலிக்கு அடப்பு தெருவை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்பவருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு இருவரும் ஆட்டோவில் அம்பாசமுத்திரம் பெட்ரோல் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் பலமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கந்தசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர்  படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |