நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் செல்வராஜ் என்ற கூலான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் லெக்கணாப்படி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனமானது சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் செல்வராஜ் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.