சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் சபரிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகள், 2 பேரக்குழந்தைகளுடன் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று விட்டு தாராபுரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக சென்ற நபர்கள் அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சபரிராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த 4 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.