மிகவும் குறுகிய வளைவுகளால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தட்சனேந்தல் விலக்கு பகுதியில் குறுகிய வளைவுகள் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வசிக்கும் மார்க்ஸ் மகாதேவன் என்ற பாதிரியார் தட்சனேந்தல் வளைவு பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த போது காரானது விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. இதில் லேசான காயங்களுடன் மார்க்ஸ் மகாதேவன் உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் எனவும், வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கையாக முன் வைத்துள்ளனர்.