Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விரைவில் முகாம்…. விழிப்புணர்வு ஊர்வலம்…. ஆசிரியர்கள் பங்கேற்பு….!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற இருப்பதை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பாக தாந்தோணி வட்டார வள மையத்திற்குட்பட்ட புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் தற்போது நடைபெற்றுள்ளது.

இந்த ஊர்வலத்தை முதன்மை கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இவை தாந்தோணி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்துள்ளது. மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |