விரைவில் பேருந்து நிலையம் கட்டப்படும் என தேவராஜ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண் சாலைகளையும் பேவர் ப்ளாக் சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி தற்போது சக்கர குப்பம் பகுதியில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை தேவராஜ் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் இருக்கின்றது.
இங்கு பொதுமக்களுக்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து மண் சாலையாக மாற்றுவதற்கான பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் ஜோலார்பேட்டை நகராட்சியில் மட்டும் தான் பேருந்து நிலையம் இல்லாமல் இருக்கின்றது. இதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பின்னர் நகராட்சியில் ஒன்றரை கோடி செலவில் எரி மேடை அமைக்கும் பணி மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கும் சிப்காட் ஏற்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.