சென்னை மணலியில் ஆட்டோவில் பணத்தை பறிகொடுத்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆட்டோ ஓட்டுனர் பணத்தை திரும்ப கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பேருந்துகளை விட ஆட்டோ சேவை மிக அதிகமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் காலை முதல் இரவு நேரம் வரையில் ஆட்டோவில் தான் பயணம் செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களில் சிலர் தங்கள் கவனக்குறைவால் சில பொருள்களை தவற விடுவது வழக்கம் தான். அதன் பிறகு தங்கள் பொருளை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கின்றனர். ஆனால் அவர்கள் பொருட்கள் திரும்பக் கிடைப்பது மிகவும் கடினம் தான். அவ்வாறு பயணத்தின்போது பொருட்களை தவறவிட்டவர்கள் ஏராளம். ஆனால் அதே பொருள் திரும்ப கிடைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை மணலி யை சேர்ந்த முனியம்மா என்ற பெண் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது 2.3 லட்ச ரூபாய் மற்றும் தங்க செயினை தவிர விட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன், தனது ஆட்டோவில் பயணம் செய்த அந்தப் பெண்ணின் பணம் மற்றும் தங்க நகை இருப்பதை பார்த்து உள்ளார். உடனடியாக அந்தப் பெண்ணின் வீடு தேடி சென்று நகை மற்றும் பணத்தை வழங்கியுள்ளார்.
அதன் பிறகு அவர் மீது கொடுத்த புகாரை காவல் துறையினர் ரத்து செய்து அவரது செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் சிலர் அப்படியே வைத்துக் கொள்வார்கள். இப்படி மற்ற பொருட்களுக்கு ஆசைப்படாமல் அவர்களிடம் ஒப்படைக்கும் பெருந்தன்மை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். இந்த பெருந்தன்மையை கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.