அமெரிக்காவில் பிரபலமான கேக் தயாரிப்பாளரான நடாலி சைட்செர்ப் உண்மையில் பாம்பு போன்று இருக்கும் கேக்கை தயாரித்திருக்கிறார்.
மனிதர்களின் உருவம் போன்ற பல வடிவங்களில் நடாலி சைட்செர்ப் தத்ரூபமாக கேக் தயாரிக்கிறார். அவர் தயார் செய்யும் கேக்குகள், விதவிதமாக பல வகையான வடிவங்களில் உள்ளது. இதனால் மக்களை எளிதாக ஈர்க்கிறது. தான் தயாரிக்கும் கேக்குகளை, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CU5GxqYt-Gw/
இந்நிலையில், பாம்பு வடிவத்திலான ஒரு கேக்கை அவர் தயாரித்திருக்கிறார். அதனை வீடியோவாக எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், மஞ்சள் நிறத்தில் ஒரு பாம்பு தெரிகிறது. அதனை அவர் கத்தியால் வெட்டுகிறார். அதன் பின்பு தான் அது கேக் என்று தெரியவருகிறது. அவ்வளவு தத்ரூபமாக பாம்பு போன்றே கேக்கை தயாரித்து அசத்தியிருக்கிறார் நடாலி சைட்செர்ப்.