வாஷிங்டன்னில் பொதுமக்கள் இரவு உடையுடன் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் தடுப்பூசி சேமிக்கப்பட்டு வைத்திருந்த ஃப்ரீசர் திடீரென பழுதடைந்தது. அதில் 1650 டோஸ் மாடெர்னா தடுப்பூசி இருந்தது. ஃப்ரீசர் பழுதானதால் தடுப்பூசியை உபயோகிக்காமல் விட்டால் அது அதிகாலை 3:30 மணிக்குள் வீணாகும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதன்பின் இது குறித்த தகவலை உடனடியாக மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசி போட யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்களை பரப்பியது. அதனை கண்ட பொதுமக்கள் தாங்கள் அணிந்திருந்த இரவு உடைகள் உடனே மருத்துவமனைக்கு வந்தனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.