Categories
தேசிய செய்திகள்

Viral Video: திடீரென ஆய்வு சென்ற ஐ.ஜி… துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் திணறிய சப்-இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சி….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்கு சென்ற போது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சந்த்கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி ஆர்.கே பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு ஐ.ஜி கூறினார்.

ஆனால் அவர் துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் திணறினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதேபோல் பல போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த முடியாமல் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் எந்நேரமும் அவசரநிலை உருவாகலாம் என்பதால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு ஐ.ஜி அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |