அமெரிக்காவில் ஒரு பெண் தன் செல்போனில் எச்சிலை துப்பி அன்லாக் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் மியாமி மாகாணத்தை சேர்ந்த மிலா மோனட் என்ற பெண் தன் நண்பர்களோடு மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது தன் திறமையை வெளிக்காட்டும் வகையில் தனது செல்போனை எடுத்து, கீ பேடில் இருக்கும் ஒரு எண்ணின் மீதும் எச்சிலை துப்பினார்.
A girl using her spit to unlock her phone. 🃏 pic.twitter.com/dhMfaj6dYV
— Public Outsider (@publicoutsider) April 25, 2022
அதனைத்தொடர்ந்து, அவரின் பின்கோடு எண்களான 6 எண்களின் மீது எச்சிலை துப்பி செல்போனை அன்லாக் செய்துவிட்டார். அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்தில் கரகோசங்கள் எழுப்பினர். அதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவிற்கு பல விமர்சனங்களும் வந்திருக்கிறது.