ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
இது குறித்து அவர் ட்விட்டரில்,’ வீராங்கனை மீராபாய் சானு தன்னுடைய அற்புதமான செயல் திறன் காரணமாக பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவருடைய வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் உத்வேகப்படுத்துகிறது ‘, என்று பிரதமர் நரேந்திர மோடி வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.