Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி …..!!

விருதுநகரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்தையும் மன சோர்வையும் போக்கி மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தி உற்சாகப்படுத்தும் என்பதால் அவர்கள் விரைவில் குணமடைய இந்த சிரிப்பு யோகா பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |