விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட யுக்தி குறித்து பந்துவீச்சு ஆலோசகர் தெரிவித்துள்ளார்
கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக், 2016 முதல் 19 உலக கோப்பை வரை இங்கிலாந்து அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக விளங்கியவர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை இங்கிலாந்த் சுழற்பந்து வீச்சாளர் வீழ்த்துவதற்கு பயன்படுத்திய யுக்தி குறித்து பேசியுள்ளார்.
“விராட் கோலியின் விக்கெட்டை ஒட்டுமொத்த இந்திய அணியின் விக்கெட் என்று தான் கருத வேண்டும் என அடில் ரஷித், மொயின் அலி ஆகியவர்களிடம் கூறுவேன். காரணம் ஒரே வீரரான விராட் கோலி அணியில் இருக்கும் 11 வீரருக்கு சமம். அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசும்போது மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எந்த பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்ள அவருக்கு சிரமம் இருந்ததில்லை. உலகமே அவரது ஆட்டத்தை பார்ப்பதால் அவருக்கு அவர் மீது மட்டுமே அதிக அழுத்தம் இருக்கும்.
அதோடு நம்பர் ஒன் வீரர் என்பதால் பேட்டிங்கில் அவருக்கு ஒரு ஈகோ இருக்கும் அவர் பேட்டிங்கில் இருக்கும்போது யாராவது டாட் பால் போட்டால் அவருக்கு ஈகோ அதிகரித்துவிடும். அதனை பயன்படுத்தி அவரது விக்கெட்டை எடுக்க முடியும். அதிலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி மற்றும் அடில் ரஷித் ஆறுமுறை விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.