கேப்டன் விராட் மனைவியுடன் கடற்கரையில் சிரித்தபடி உற்சாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள் இருப்பதால் இந்திய அணியினர் மகிழ்ச்சி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் அண்டிகுவா பகுதியில் உள்ள கடற்கரையில் ஸ்டைலாக உட்கார்ந்திருப்பது போன்ற புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் மேலே ஒரு பிரகாசமான நீல வானமும், அவர்களுக்கு முன்னால் இருக்கும் கடலும், கேமராவைப் பார்த்து இருவரும் மகிழ்ச்சியாக உற்சாக போஸ் கொடுத்தும் அசத்துகின்றனர். இருவரும் விடுமுறையை எஞ்சாய் பண்ணுகின்றனர்.
விராட் படத்தை ஒரு கொத்து ஈமோஜிகளுடன் – ஒரு ஜோடி, சூரியன் மற்றும் இதயம் என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B1bWo2slti3/?utm_source=ig_web_button_share_sheet
இதற்கு முன்பு விராட் கோலி தனது அணி வீரர்களுடன் தண்ணீரில் கேமராவுக்கு போஸ் கொடுத்தார். “வீரர்களுடன் கடற்கரையில் அதிர்ச்சியூட்டும் நாள்,” என்று அவர் படத்துடன் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B1aUS5IFO0P/?utm_source=ig_web_button_share_sheet
முன்னதாக, அனுஷ்கா சர்மா ஒரு ஆரஞ்சு மற்றும் வெள்ளை பிகினியில் தன்னைப் பற்றிய ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு அனுஷ்கா சர்மா “சூரியன் முத்தமிட்டது & ஆசீர்வதிக்கப்பட்டது.” என்று தலைப்பிட்டுள்ளார். முதல் ஆளாக கமெண்ட்டில் கோலி சிவப்பு இதயம் மற்றும் இதய கண்கள் ஈமோஜிகளை பதிவு செய்தார்.
https://www.instagram.com/p/B1U31mrJgND/?utm_source=ig_web_button_share_sheet