Categories
கிரிக்கெட் விளையாட்டு

“50 டெஸ்ட் போட்டியில் கேப்டன்”… கங்குலியின் சாதனையை முறியடித்த கோலி..!!

50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Image

 

இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான2 -ஆவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி விராட் கோலி கேப்டனாக களமிறங்கும் 50-ஆவது போட்டியாகும். இதன் மூலம் 50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. 49 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்திய கங்குலியின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த தல தோனி முதலிடம் வகிக்கிறார்.

Image

ஏற்கனவே விராட் கோலி தொடக்கத்தில் டோனியின் சாதனையை முறியடித்தார். அந்த சாதனை என்னவென்றால்  டோனி 60 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்து 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். விராட் கோலி மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 29 முறை வென்றுள்ளார். முன்னாள் கேப்டன் கங்குலி 49 போட்டிகளில் கேப்டனாக இருந்து 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |