மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று மதியம் நடக்கவிருக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அமித் தலைவர் விராட் கோஹ்லி சாதனை படைக்கவுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரைக் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடக்கவிருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ரன்கள் கடக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட்டின் 26 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார். ஜாவித் மியான்டட் 1930 ரன்கள் குவித்து உள்ள நிலையில் விராட் கோஹ்லி தற்போது வரை 1912 ரன்கள் குவித்துள்ளார்.