Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி சின்ன வயசு பிரண்ட் மாதிரி பழகுவாறு …! மனம் திறந்து பேசிய முகமது ஷமி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , பவுலர்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுத்தது இல்லை ,என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களின் ஒருவராக முகமது ஷமி இருந்து வருகிறார். அதோடு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி, பும்ரா , இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்த பந்து வீச்சாளர்களாக  திகழ்கின்றன. இதை தொடர்ந்து இங்கிலாந்தில்  நடைபெற உள்ள  ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், முகமது ஷமி இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எப்போதுமே எங்களுடன் ஒரு சிறுவயது நண்பனைப் போல ,நடந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, கேப்டன் விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே ஆதரவாகவும், அவர்கள் விளையாடும்போது முழு சுதந்திரத்தையும் கொடுப்பார்.  நாங்கள் ஒரு குழுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வந்து வீசும் போது எங்கள் மீது நெருக்கடியை சுமத்தியது கிடையாது. அதோடு அவர் எங்களிடம் மிகவும் நகைச்சுவை உணர்வுடன், சிறுவயது நண்பனைப் போல பழகுவார் என்று கூறியுள்ளார். மைதானத்தில் விளையாடும் போது சில சமயங்களில் வேடிக்கையாகவும்,ஆக்ரோஷமாகவும் பேசிக்கொள்வோம் ,என்று விராட் கோலியை பற்றி முகமது ஷமி கூறியுள்ளார்.

Categories

Tech |