விராட் கோலி- ரோகித் இடையே விரிசல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது .
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் , ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே விரிசல் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறும்போது ,”சில சமயம் விராட் கோலி- ரோகித் இடையே மோதல் இருப்பதாக வெளியாகும் செய்தியை படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வரும் .
எதிர்காலம் குறித்து இருவரிடமும் சிறப்பான திட்டமிடல் உள்ளது என்பதை உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். என் இடத்தில் நீங்கள் இருந்தால் விராட் கோலியும் , ரோகித்தும் ஒரு அணியாக குடும்பமாக எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் உற்சாகமாக பார்த்து ரசிக்கலாம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.