Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது’ ….! டுவான் ஒலிவியர் ஓபன் டாக் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி  தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி  தொடங்குகிறது . இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது என தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரான இந்தப் போட்டி எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தொடராக இருக்கும் .

இது ஒரு உற்சாகமான சவாலாகும். அதோடு இந்திய அணியில் விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமான ஒன்று .ஆனால் அதை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன் .அதேசமயம் உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசுகிறேன்.என்னைப் பொறுத்தவரை முதல் போட்டியில் சிறப்பாக விளையாடுவது முக்கியம் .இங்குள்ள சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |