உலகளவில் உள்ள கிரிக்கெட் அணி கேப்டன்களில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் விராட்கோலி 2 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
உலகளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கட்டாயம் விராட் கோலி இடம் பிடிப்பார். மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி, கேப்டனாக விளங்கும் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பல விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். விராட் கோலி அதிகமாக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று பலரும் இருந்தனர். ஆனால் விராட் கோலியை விட இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட், அதிக சம்பளம் பெறுகிறார்.
இதனால் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில், விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். பிசிசிஐ-யின் ‘ ஏ ப்ளஸ்’ பிரிவில் உள்ள விராட் கோலிக்கு ரூபாய் 7 கோடியை சம்பளமாக பிசிசிஐ வழங்குகிறது. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட், ஆண்டிற்கு 7,00,000 பவுண்ட் ,இந்திய மதிப்பில் ரூபாய் 7.22 கோடி சம்பளமாக பெறுகிறார். கடந்த 2020 ம் ஆண்டு ‘போர்ப்ஸ்’ இதழ் வெளியிட்ட அதிகமாக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.