வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி சர்வதேச T 20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 3- வகை கிரிக்கெட் போட்டியிலும் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார் . சமீப காலமாக ICC டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கபட்டது.அதனால் T 20 பேட்டிங்க் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விராட் கோலி 21 பந்தில் 51 ரன்களை அதிவேகமாக அடித்தார். அதுமட்டுமல்லாமல் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 29 பந்தில் 70 ரன்களை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். முன்னதாக முதல் போட்டியில் அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு வெற்றியை பரிசாக கொடுத்தார்.
இதன் மூலம் 2019 ICC, T 20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 15-வது இடத்திலிருந்து 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் . தற்போது நடத்த மூன்று T 20 போட்டிகளில் 183 ரன்களை குவித்துள்ளார். இரண்டாவது அரைசதம் அடித்த மற்றொரு இந்திய வீரரான கே.ல்.ராகுல் தன்னுடைய சிறந்த பேட்டிங்கால் 3 இடங்கள் முன்னேறி 6 -வது இடத்தை பிடித்துள்ளார்.ஆனால் ஹிட்மேன் ரோஹித் சர்மா ஒரு இடத்தை நழுவி 9-வது இடத்திற்கு சென்றுள்ளார்.