விரைவில் இந்தியாவில் இணைய சேவையை வழங்க இருப்பதாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் இணைய சேவையை வழங்க இருப்பதாக இந்திய பிரிவுக்கான தலைவர் சஞ்சய் பார்கவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் பார்கவா வெளியிட்டுள்ள அறிக்கையில் “இணைய சேவை வழங்குவதற்கான உரிமைகளைப் பெற இந்திய அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக கூறினார். மேலும் வங்கி கணக்குகள் தொடங்குவது உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்டார்லிங் நிறுவனம் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்னெட், சேட்டிலைட், செல்போன்கள், வயர் மற்றும் வயர்லெஸ் தொலைத்தொடர்பு இணைப்பு உள்ளிட்ட வணிக சேவைகளை வழங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக அனுமதி கிடைத்ததும் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மாவட்ட பள்ளிகளில் 100 இலவச இணைப்புகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.