Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

விரைவில் வரவிருக்கிறான் “அக்னி அசுரன்”…!!

ஹாலிவுட் படமான பையர் டுவிஸ்டர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அக்னி அசுரனாக வெளியாக உள்ளது.

வெற்றி பெற்ற பல ஹாலிவுட் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்வது வழக்கமான ஒன்று. 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் “பையர் டுவிஸ்டர்”. இப்படத்தை தமிழில் “அக்னி அரக்கன்” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

சிறுவாணி என்ற படத்தை இயக்கிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், இந்தப்படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்ய உள்ளார். மேலும் அவரது மருதமலை பிலிம்ஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் இப்படம் தியேட்டரில் வெளியாகும்.

 

Categories

Tech |