Categories
மாநில செய்திகள்

விரைவில் வெளியாகும் நீட் தேர்வு முடிவு…. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை செய்யும் எண்ணத்தை தடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் நடிக ஆர் ஜே பாலாஜி மற்றும் கல்வி அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை கூறினார். அதில் தன் தேர்வுகளில் பல தோல்விகளைத் தழுவிருந்தாலும் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மருத்துவ படிப்பு தவிர்த்து பிற படிப்புகள் பற்றியும் அதில் உள்ள வேலைவாய்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |