Categories
கிரிக்கெட் விளையாட்டு

“MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த ஆட்டம்” வாழ்த்திய வீரேந்திர சேவாக் …!!

MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார்.

உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

Image result for sehwag dhoni jadeja

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் இறுதி போட்டிக்கு வந்த நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர்.என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |